பிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசனின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன் அணியும் நாளை மோத உள்ளன. இதில், தொடர்ந்து 5 சீசனில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் தோல்வி என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நாளை துவங்குகிறது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.
All set for Mumbai vs Chennai IPL match in Wankhede Stadium. It is the most expected match in this IPL series