முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகும் சினிமா ஸ்ட்ரைக்

2018-04-06 5,066

திரையுலக ஸ்ட்ரைக் ஆரம்பித்து இன்று 36வது நாள். இந்த 36 நாட்களும் தமிழ் சினிமாவில் எந்தப் படமும் புதிய படங்களும் வெளியாகவில்லை. தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான சீசன் இது. கோடைக் காலம். எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் நகரம், கிராமம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் மக்கள் பார்த்துவிடுவார்கள். ஆனால் இந்த கோடை காலம் முழுக்க தியேட்டர்கள் வெறிச்சோடிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சில ஆங்கிலப் படங்கள்தான் இந்த ஒரு மாதத்தில் புதிதாக வெளியாகின. இரண்டு தெலுங்குப் படங்கள் வந்தன. இனி ஸ்ட்ரைக் முடியும் வரை தெலுங்குப் படங்களும் ரிலீஸ் ஆகாது என்று சொல்லிவிட்டனர். எனவே பழைய எம்ஜிஆர், ரஜினி படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு வருகின்றனர். கிராமப்பகுதி அரங்குகளில் பழைய விஜய் படங்கள், அஜித்தின் பில்லா போன்ற படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் சினிமா வரலாற்றில் இத்தனை நாட்கள் தொடர்ந்தார்போல புதுப் படங்கள் வெளியிடாமல் இருப்பது இதுவே முதல் முறை. போதிய கூட்டம் வராததால் பல திரையரங்குகள் காட்சிகளை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஸ்ட்ரைக் ஆரம்பித்து 36 நாட்களாக நடந்து வருகிறது. புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இடையில் சில நாட்கள் திரையரங்குகளும் ஸ்ட்ரைக்கில் பங்கேற்றன. ஆனால் திடீரென்று ஸ்ட்ரைக்கை முறித்துக் கொண்டு ஆங்கில மற்றும் பழைய படங்களைத் திரையிடுவதாக அறிவித்துவிட்டன. அதிக இருக்கைகள் கொண்ட ஒற்றைத் திரையரங்குகள் நிலைதான் பரிதாபம். சில அரங்குகளுக்கு ஒற்றைப்படையில்தான் ஆட்களே வருகிறார்கள். இந்த வசூலைக் கொண்டு தியேட்டர் பராமரிப்பு, மின்கட்டணம் கூட செலுத்த முடியாது என்பதால், அந்தக் காட்சிகளை ரத்து செய்கின்றன திரையரங்குகள். பல திரைகள் கொண்ட மல்டிப்ளெக்ஸ்களிலும் இப்போது ஆட்கள் வருவது குறைந்துவிட்டதால் காட்சிகளை ரத்து செய்கின்றனர்.


For the past 36 days there was no new movie release in Tamil cinema. Many theaters have cancelled shows due to poor attendance.