சென்னை வடபழனியில் குருக்களை கட்டிப் போட்டு விட்டு அவரது மனைவியை மர்மநபர்கள் படுகொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். சென்னை வடபழனி சிவன் கோயிலின் அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் பாலகணேஷ் (எ) பிரபு. இவரது மனைவி ஞானபிரியா. இருவரும் வடபழனி சிவன்கோவில் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வீட்டின் உரிமையாளர் விஜயலஷ்மி, குருக்கள் பாலகணேஷ் வீட்டின் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் வடபழனி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார்.
A temple priest who stays with his wife tied by some unknown gangs and they murdr his wife and looted her jewels.