Janhvi Kapoor has lost an excellent opportunity to act with Ranveer Singh in Simmba to be directed by Rohit Shetty. It is Janhvi who has to be blamed for losing this offer.
ஸ்ரீதேவியின் மகள் செய்த காரியத்தை பார்த்தவர்கள் அவர் வாயால் அவரே ஆப்பு வைத்துக் கொண்டார் என்கிறார்கள். ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் என்ற இந்தி படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் ஜோடியாக நடிக்கிறார் ஜான்வி. ரன்வீர் சிங்கை வைத்து ரோஹித் ஷெட்டி இயக்கும் படம் சிம்பா. கத்ரீனா கைஃப், ப்ரியா பிரகாஷ் வாரியர், சாரா அலி கான், ஜான்வி கபூர் ஆகியோரின் பெயர்கள் ஹீரோயின் பட்டியலில் இருந்தது. ஜான்வி கபூர் மற்றும் அவரின் தோழியும், நடிகர் சயிப் அலி கானின் மகளுமான சாரா ஆகியோரிடம் சிம்பா ஸ்க்ரிப்ட்டை கொடுத்து படிக்குமாறு கூறியுள்ளனர். ஸ்கிரிப்ட்டை படித்த சாரா அமைதியாக இருந்துள்ளார். ஜான்வியோ சிம்பா படத்தில் நடிக்க என்னை கேட்கிறார்கள், ரன்வீர் சிங் போன்ற பெரிய ஹீரோவுடன் நடிப்பதில் பயமாக இருக்கிறது என்று அனைவரிடமும் கூறி புலம்பியுள்ளார். ஜான்வியின் புலம்பல் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் காதில் விழுந்துள்ளது. அதன் பிறகே சாராவை ஒப்பந்தம் செய்துள்ளார். சாராவின் முதல் படமான கேதர்நாத் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிம்பாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தாயை இழந்த ஜான்விக்கு பெரிய பட வாய்ப்பு கை நழுவியுள்ளது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷூட்டிங்ஸ்பாட்டில் இஷான் கட்டாரை தனது மடியில் அமர வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜான்வி. ஸ்ரீதேவி மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடந்திருக்குமா என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.