புதுச்சேரியில் இயக்கப்பட்ட தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு.. போலீஸ் குவிப்பு

2018-04-05 998

தமிழக அரசின் 4 பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து புதுச்சேரியில் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்தால் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலும் இயங்கவி்ல்லை. ஆட்டோ, லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்களும் இயங்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருகிறது.


Tamil Nadu govt's four buses damaged in Puduchery due to bandh. This causes tension in the area.

Videos similaires