தலித்துகளின் போராட்டத்தால் கர்நாடகாவில் பாஜகவுக்கு சிக்கல்

2018-04-03 1,344

தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை சட்டத்தை திருத்தியமைத்ததை கண்டித்து வடமாநிலங்களில் தலித்துகள் நடத்தி வரும் போராட்டத்தால் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. 1989-இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 20-ஆம் தேதி அதில் திருத்தங்களை மேற்கொண்டது. இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

The Dalit protests which rocked the country on Monday will play out big in the Karnataka assembly elections. The elections will be held on May 12 and counting would take place on May 15