டிடிவி தினகரன், அ.ம.மு.க கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகளால் திருச்சி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான அய்யாகண்ணு தலைமையில் திரளான விவசாயிகளும் பங்கேற்றனர். தினகரன், அய்யாகண்ணு, பி.ஆர்.பாண்டியன் போன்ற தலைவர்கள் வேனில் நின்றபடி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
அப்போது ஒலிபெருக்கி வாயிலாக பேசிய அய்யாகண்ணு, "விவசாயிகளுக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை ஆரம்பித்து வைத்தவர் டிடிவி தினகரன்" என புகழாரம் சூட்டினார். அநாதைகளாக இருந்த எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் டிடிவி தினகரன் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.
Trichy Airport is sieged by farmers and TTV Dinakaran over Cauvery issue.