இந்த உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பது தெரியுமா? | Boldsky

2018-03-30 14,620

உங்களுக்கு ஏற்கனவே இரத்த அழுத்தம் இருந்தால், குறிப்பிட்ட சில உணவுகளில் இருந்து விலகி இருப்பதே நல்லது. அதோடு அன்றாடம் உடற்பயிற்சி, மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகள் போன்றவற்றையும் தவறாமல் எடுப்பதன் மூலம், உயர் இரத்த அழுத்தத்தை சிரமமின்றி பராமரிக்கலாம்.
இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிப்பதன் மூலும், உடலின் ஒவ்வொரு திசுக்கள் மற்றும் உறுப்புக்களுக்கும் போதுமான இரத்த ஓட்டம் இருக்கும். ஆனால் இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, இதயமானது மிகவும் சிரமப்பட்டு இரத்தத்தை அழுத்தும். இப்படியே நீண்ட நாட்கள் இதயம் கஷ்டப்பட்டு இரத்தத்தை உறுப்புக்களுக்கு அழுத்தத்தினால், இதயம் அதிகமாக வேலை செய்ததால் விரைவில் பாதிக்கப்பட்டு, இதய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

https://tamil.boldsky.com/