ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் இருந்து காயத்தால் வெளியேறுகிறார். உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் மிட்சேல் ஸ்டார்க். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர். இந்த நிலையில், ஜோகனஸ்பர்க்கில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், மிட்சேல் ஸ்டார்க் காயமடைந்தார். அவருக்கு பதில் சாட் சயர்ஸ் என்ற வீரர் ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து உடனடியாக மிட்சேல் ஸ்டார்க் தாயகம் திரும்பியுள்ளார். ஆஸி. கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், வலது காலில் ஏற்பட்ட காயத்தால், மிட்சேல் ஸ்டார்க் ஆஸ்திரேலியா திரும்பிவிட்டதாகவும், அவரால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணி, மிட்சேல் ஸ்டார்கை ரூ.9.4 கோடிக்கு, ஜனவரியில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் வாங்கியிருந்தது. அவரை மிகவும் நம்பிக்கொண்டிருந்தது அந்த அணி. சர்வதே போட்டிகளில் ஆட வேண்டும் என்பதற்காக கடந்த வருடம் ஐபிஎல் தொடரிலும், பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் 2016லும் மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. தொடர்ச்சியாக 3வது ஆண்டாக மிட்சேல் ஸ்டார்க் ஐபிஎல் ஆட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Kolkata Knight Riders (KKR) have suffered a huge blow ahead of the eleventh edition of the Indian Premier League (IPL) as star Australian pacer Mitchell Starc will miss the tournament due to injury, Cricket Australia announced on Friday.