காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு...
சிவகங்கையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 16 பேர் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது காவேரி மேலாண்மை வாரியம் தொடர்பாக உச்சநிதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தியவர்களை போலீசாரும் தீயணைப்பு துறையினரும் சமாதானம் செய்து கீழே இறங்க செய்தனர். டவரில் ஏறும் போது ஒருசிலர் அணிந்திருந்த டவுசர்கள் கம்பியில் சிக்கி கிழிந்தன. பின்னர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
des : Tamilnadu Livestock Participants stormed the mobile phone of the Kaveri management board