ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை சந்திக்க கமல் வரும் 1-ம் தேதி தூத்துக்குடிக்கு வருவதாக அவர் கூறியுள்ள நிலையில் அவரை போலீஸார் அனுமதிப்பதா அல்லது தடை விதிப்பதா என்பது குறித்து யோசனையில் உள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி குமாராரெட்டிபாளையம் பகுதி மக்கள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வரும் நிலையில் மக்கள் விரும்பினால் மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் நானும் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தர தயார் என்று கமலஹாசன் அறிவித்தார். இதை ஏற்று சென்னையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போராட்ட குழுவினர் அவரை போராட்டத்தில் பங்கேற்ற அழைப்பு விடுத்தனர்.
Tuticorin Police discusses with higher officials that they will stop Kamal to participate in Sterlite protest