காவிரி மேலாண்மை வாரியம் அமைப்போம் என்று சொன்ன தமிழக பாஜக தலைவர்கள் எங்கே என சிலர் கேட்கிறார்கள்... காணாமல் போகவும் ஓடி ஒளியவும் தமிழக பாஜக தலைவர்கள் கோழைகள் அல்ல என ஃபேஸ்புக்கில் கொந்தளித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை மத்திய பாஜக அரசு.
இதனால் மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
காவிரியில் தமிழக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக பாஜக முனைப்பாக இருக்கிறது, தொடர்ந்து எங்களது கோரிக்கையை வலியுறுத்துவது மட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் இல கணேசன் தலைமையில் ஒரு குழு அமைத்து நமது உரிமையை வலிமையாக எடுத்துரைத்திருக்கிறோம். மத்திய அரசும் உச்சநீதிமன்றம் என்ன வலியுறுத்தியதோ அதை நிச்சயம் நிறைவேற்றும், நீதி மன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் மத்திய அரசுக்கு கிடையாது.
TamilNadu BJP president Tamilisai Soundarajan said that her party will solve the Cauvery crisis.