சிவகங்கையில் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம்!

2018-03-30 749

கட்சியினர் செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதுவரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனால் தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். சிவகங்கையில், பஸ் நிலையம், தெப்பக்குளம் பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 10 பேர் ஏறி நின்று இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சியினர், 10 பேரும், அங்குள்ள 2 செல்போன் டவர்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Tamilaga Valvurimai Katchi men enter protest by mounting mobile phone towers to set up Cauvery management board.

Videos similaires