அதிமுக எம்பிக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யப் போவதாக கூறுவதால் முதல்வர் எடப்பாடியார் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. 'கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடக்கவிருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளாது' என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றன. 'இந்த விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
Sources said that TamilNadu Chief Minister Edappadi Palanisamy is not happy over the AIADMK MPs decision to resign for the Cauvery issue.