கண்கவர் வண்ண மலர்களால் பூத்துக்குலுங்கும் தேக்கடி 12 வது மலர்கண்காட்சி இன்று தொடங்கியது
தமிழக கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில் தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 12 வது மலர்கண்காட்சி இன்று தொடங்கியது ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களும், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது இந்த கண்காட்சியில் வேளான் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் நடைபெறும் இந்த மலர்கண்காட்சி வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி முடிவடைகிறது.
Des : The flowering deck of 12th flowers started today with spectacular flowers