கர்நாடக மாநில தேர்தலையொட்டி அமித்ஷா பேசிய பேச்சுக்களை பாஜக எம்பி கன்னடத்தில் தவறாக மொழிபெயர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்துக்கு வரும் மே 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க போராடுகிறது. அதுபோல் பாஜகவும் ஆட்சியை பிடிக்க பாடாய்படுகிறது. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு பெங்களூரில் கேம்ப் அடித்துள்ளார் அமித்ஷா. இவர் தவாங்கிரியில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஊழலுக்காக போட்டி அமைத்தால் அதில் எடியூரப்பாவின் ஆட்சிதான் முதலிடத்தை பிடிக்கும் என்றார்.
Karnataka BJP MP Pralad Joshi wrongly translates AmitShah's comment in Kannada and claims that Narendra Modi government will not do anything for welfare of the dalits and poor people.