காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், புதுவை, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்நிலையில் காவிரி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Farmers involve in Road roko in Tanjore for demanding to constitute Cauvery Management Board.