மத்திய அரசை எதிர்த்தால் அடுத்த நாள் யாருக்கும் அமைச்சர் பதவி இருக்காது என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுமா என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் தமிழக விவசாயிகள். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் குறித்து திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
DMK foremer minister Duraimurugan Condemns Central govt for not forming Cauvery Management board.