ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு!

2018-03-29 434

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி அருகேயுள்ள, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக ஆலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அந்த கிராமங்களில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குமரெட்டியாபுரம், வீரபாண்டியபுரம், குமாரகிரி உள்ளிட்ட கிராமங்களில் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர். அப்போது தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் தாசில்தார்களும் உடனிருந்தனர். அந்த குழுவினர் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர். காற்று, தண்ணீரில் மாசு கலந்துள்ளதா என்பதை இவர்கள் ஆய்வு செய்தனர்.

Thoothukudi revenue divisional officer (RDO) Prashant inspected ongoing expansion works at the Sterlite copper plant on Wednesday.

Free Traffic Exchange

Videos similaires