உத்திரவாதம் அளிக்கும் செங்கோட்டையன்....வீடியோ

2018-03-28 228

மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

ஈரோடில் நவீன நூலகத்தை திறந்து வைத்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது . தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நவீன நூலகங்கள் திறக்கப்படும் என்றும் அந்த நூலகங்களில் மாணவர்கள் பொது தேர்வுகளில் மதிப்பெண் பெற தேவையான பயிற்சி புத்தகங்கள் இடம் பெரும் என்று தெரிவித்தார் .மேலும் நீட் போன்ற மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் எதிர் கொண்டு வெற்றி பெறும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்கையை விட அரசு பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

des : School Education Minister Chengottiyan said that training courses will be conducted to all students of Tamil Nadu students to face all examinations.

Videos similaires