பாகிஸ்தான் பிரதமரை விமான நிலையத்தில் கோட்டை கழற்றி சோதனை- வீடியோ

2018-03-28 3,818

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அப்பாஸியை விமான நிலையத்தில் அவரது கோட்டை கழற்றி சோதனை மேற்கொண்ட சம்பவம் பாகிஸ்தானுடனான நட்புறவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பெயர் பனாமா பேப்பரில் இடம்பெற்றுள்ளதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் 18-ஆவது பிரதமராக ஷாஹித் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவில் வசிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரது சகோதரியை சந்திக்க சென்றிருந்தார். எளிமைக்கு சொந்தக்காரரான அப்பாஸியை சாதாரண பயணியை போல் அமெரிக்க விமான நிலைய போலீஸார் சோதனைக்குட்படுத்தினர்.

Pakistan's Prime Minister Shahid Khaqan Abbasi frisked during security procedure at John F. Kennedy International airport in New York, according to Pakistan media.

Videos similaires