போலீஸ்காரர் கள்ளகாதலி சிறையில் அடைப்பு- வீடியோ

2018-03-28 592

கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருக்க இடையுறாக இருந்த கணவனை கொள்ள முயற்ச்சித்த பெண்ணையும் போலீஸ்காரரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி.யை சேர்ந்தவர் சாமி இவர் கம்பத்தில் விளையாட்டு ஆடை தயாரித்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.இவருக்கு அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த சுகந்திக்கும் திருமணமாகி இவர்களுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சுதாகர் என்ற போலீஸ்காரருக்கும் சுமதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சுகந்தியும் சுதாகரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த மாதம் இருவரும் கள்ளக்காதலுக்கு இடையுறாக இருக்கும் கணவனை போட்டுத்தள்ள திட்டமிட்டுள்ளார் . இந்நிலையில் நேற்று முன் தினம் எதற்சையாக சுகந்தியின் செல்போனை எடுத்த சாமி அதில் தன்னை கொலை செய்ய தனது மனைவியும் போலீஸ்காரர் சுதாகரும் திட்டமிட்டுள்ள ஆடியோ பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இது குறித்து கூடலூர் காவல் நிலையத்தில் சாமி புகார் கொடுத்தார். இப்புகார் குறித்து விசாரணை நடத்திய ஆய்வாளர் சுகந்தியிடம் விசாரணை நடத்தினார். போலீசாரின் கிடுக்கி பிடி விசாரணையில் சுகந்தி குற்றத்தை ஒத்துக்கொண்டுள்ளார். இதனிடையில் தலைமறைவாக இருந்த சுதாகரனையும் போலீசார் கைது செய்தனர். இருவரையும் பிடித்த போலீசார் விசாரணைக்கு பின்னர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Des : The police and the police were arrested and imprisoned by the police who tried to make a housewife who was lazy to have fun.

Videos similaires