ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மாணவர்கள் 3-வது நாளாக போராட்டம்!

2018-03-28 2,609

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் 3-வது நாளாக மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விளைநிலம் நஞ்சாகிப் போனதுடன் கருச்சிதைவு, புற்றுநோய் ஆகியவற்றாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஸ்டெர்லை நிறுவனத்தை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை கிராமங்கள்தோறும் நடத்தி வருகின்றனர். தற்போது மாணவர்களும் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர்.

Students continue their protest against Sterlite Copper, a unit of Vedanta in Tuticorin.

Free Traffic Exchange

Videos similaires