மலையாள சினிமாவின் முன்னணி நடிகை கவுதமி நாயர், துல்கர் சல்மான் நடித்த 'செகண்ட் ஷோ' படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனை காதலித்தார். கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 'டைமண்ட் நெக்லஸ்', 'சாப்டர்ஸ்', 'கேம்பஸ் ஸ்டோரி' உள்பட பல படங்களில் நடித்த கௌதமி நாயருக்கு படிப்பிலும் ஆர்வம் அதிகம். சினிமாவுக்கு வந்தாலும் படிப்பை விடுவதாக ஐடியா இல்லை. திருவனந்தபுரம் அரசு பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி சைக்காலஜி படித்து வந்தார். சைக்காலஜியில் மிகப்பெரிய ஸ்காலராக வேண்டும் என்பதுதான் அவரது கனவாம். இதனால் சினிமாவை விட்டு இரண்டு ஆண்டுகளாக விலகி இருந்த கௌதமி, முழுநேரமும் படிப்பில் கவனம் செலுத்தினார். எம்.எஸ்.சி சைக்காலஜி படிப்பில் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கௌதமி 90% மதிப்பெண்கள் பெற்று பல்கலைகழகத்தில் இரண்டாவது ரேங்க் பெற்றார். ஒரு நடிகை நடிக்க வந்த பிறகு, அதுவும் திருமணத்துக்கு பிறகு யுனிவர்சிட்டி ரேங்க் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரமுகர்கள் நடிகை கௌதமிக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். படிப்பு முடிந்துவிட்டதால் இனிமேல், சினிமா பக்கம் திரும்புவார் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல, இந்த மலையாள நாயகியும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பாரா?
Malayalam actress Gauthami Nair made her debut opposite Dulquer Salman in 'Second Show'. Gauthami Nair married to director Srinath Rajendran. Later, Gauthami studied MSC Psychology on full swing and got university rank.