கவிஞர் சினேகன் நடிக்கவிருக்கும் 'பனங்காட்டு நரி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு சினேகன், ஓவியா இருவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். 'பனங்காட்டு நரி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஓவியா சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில், சினேகனுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. பாடலாசிரியர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். நடிகை ஓவியா பல படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் அதிகமாகப் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். சினேகன் தற்போது 'பனங்காட்டு நரி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை 'யமுனா' படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ விஷ்ணு கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஓவியா சமீபத்தில் வெளியிட்டார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஓவியா நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
After 'Biggboss' show, Snehan and Oviya both became popular among fans. It is reported that the actress Oviya will be pairing opposite to snehan in the film 'Panangaatu Nari'.