2 வாரத்தில் 2 நடிகர்கள் மரணம்- வீடியோ

2018-03-27 2

பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் பரஞ்பே பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தில் மில் கயி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கரண் பரஞ்பே(26). அந்த நிகழ்ச்சியில் அவர் ஜிக்னேஷ் என்ற ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதில் இருந்து ரசிகர்கள் அவரை ஜிக்னேஷ் என்றே அழைத்து வந்தனர். மும்பையில் வசித்து வந்தார் கரண். அவர் தனது வீட்டு படுக்கையறையில் பிணமாகக் கிடந்ததை அவரது தாய் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கண்டுபிடித்தார். கரணுக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரணின் மரண செய்தி அறிந்து அவருடன் நடித்த கலைஞர்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். சாந்தி உள்ளிட்ட பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நரேந்திர ஜா கடந்த 14ம் தேதி புனேவில் மரணம் அடைந்தார். இதையடுத்து கரண் இறந்துள்ளது தொலைக்காட்சி பிரபலங்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Videos similaires