கர்நாடக தேர்தல் தேதியை முன்னரே அறிவித்த பாஜக ஐடி விங்- வீடியோ

2018-03-27 2

தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை பாஜக ஐடி விங் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மே மாதம் இறுதியில் சித்தராமையாவின் ஆட்சி முடிவடைகிறது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முழுவீச்சில் தயாராகி உள்ளது. கர்நாடக சட்டசபைக்கு மே 12 ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கும் என்றும் வேட்பு மனு தக்கல் செய்ய ஏப்ரல் 24 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Even before the Election Commission declares the date, BJP's national Information and technology in-charge wrote the date on Twitter.

Videos similaires