தானும், தன் மகனும் மனமுடைந்துள்ளதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி ரன்வீர் சிங்கை வைத்து சிம்பா என்ற படத்தை எடுக்கிறார். கரண் ஜோஹார் தயாரிக்கும் இந்த படத்தில் ரன்வீர் ஜோடியாக நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா நடிக்கிறார். ரன்வீருக்கு வில்லனாக நடிக்குமாறு ரோஹித் மாதவனை கேட்டுள்ளார். மாதவனுக்கு தோள் பட்டை பிரச்சனையால் கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் தேறி வருகிறார். இந்நிலையில் வந்த சிம்பா பட வாய்ப்பை அவரால் ஏற்க முடியவில்லை. நானும், என் மகனும் ரோஹித் ஷெட்டி மற்றும் அவரின் படங்களின் ரசிகர்கள். அப்படி இருக்கும்போது காயம் காரணமாக அவர் படத்தில் நடிக்க முடியாமல் போனதால் நாங்கள் இருவரும் மனமுடைந்துள்ளோம். நான் தேறி வருகிறேன் ஆனால் இது பெரிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார் மாதவன். கவுதம் மேனன் இயக்க உள்ள விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தில் மாதவன் தான் ஹீரோ. மாதவன், த்ரிஷா ஜோடியை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Madhavan was supposed to play the villain in Simmba. But now unfortunately, the actor has now backed out of this Rohit Shetty directorial because of health reasons. Madhavan took to his Twitter page to make the announcement and added that he is very 'heartbroken' with this latest development.