தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் முழு கடையடைப்புப் போராட்டம் தூத்துக்குடியில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது.
பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய காய்கறி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தன என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி. மேலும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், மில்லர்புரத்தில் இருந்து, பழைய பேருந்து நிலையம் வரை, 4 கி.மீ. தூரத்துக்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முழுமையாக நிறைந்திருந்தனர். பல்வேறு குழுக்களாக கோஷம் எழுப்பியபடி நின்றிருந்தனர். பெருமளவில் பொதுமக்கள் திரண்டதால், மாலை 6 மணிக்குப் பிறகும் இச்சாலையில் கடைகள் திறக்கப்படவில்லை. போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இரவு 8 மணிக்குப் பிறகு படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கியது என்று அச்செய்தி விவரிக்கிறது. உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில். மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது
Sterlite issue becoming bigger and bigger every day.