ரஷ்யாவிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து- வீடியோ

2018-03-26 1,641

ரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய, 37 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் வெெளியாகியுள்ளன. தீயில் சிக்கிய சுமார் 70 பேர் பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை. தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 3600 கி.மீ தொலைவில் சைபீரியா மாகாணத்திலுள்ளது கெமெரோவோ நகரம். இங்குள்ள பிரமாண்ட ஷாப்பிங் மால் ஒன்றில் ரஷ்ய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெள்ளம் அலைமோதிக்கொண்டிருந்தது. பொருட்கள் வாங்கவந்தோர், திரையங்கு வந்தோர் என மக்கள் நெருக்கம் அங்கு அதிகம் காணப்பட்டது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து ஓடினர். தீயில் இருந்து தப்பிக்க சிலர் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தனர். தகவல் அறிந்ததும், சுமார் 288 மீட்பு படை வீரர்கள் அங்கு குவிந்தனர். 62 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இந்திய நேரப்படி காலை 8 மணி நிலவரத்தின்படி, தீயில் சிக்கிய 67 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 70 பேர் பற்றி தகவல் இல்லை. அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது. 1500 சதுர அடி அளவுக்கு தீ பரவியுள்ளதால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.

Videos similaires