மின்சாரம் தாக்கி ஊழியர் பலி...மதுரையில் அதிர்ச்சி- வீடியோ

2018-03-23 1,235

மின்இணைப்பை சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாமாக உயிரிழந்தார் .





மதுரை சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி இவர் மின்வாரியத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார், இன்று காலை சிந்தாமணி மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் மின் இணைப்பை சரி செய்ய மின்கம்மத்தில் நின்று வேலை செய்யும் போது எதிர் பாரத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானர். இது குறித்து தகவலறிந்து வந்த மின் வாரிய அதிகாரிகள் ,கீரைத் துறை போலீஸார் தங்கப்பாண்டி உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பணியின் போது மின்வாரிய ஊழியர் மரணம் அடைந்தது அப்பகுதியில் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Videos similaires