திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார். திருவனந்தபுரம்: திருமணத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன் கேரளாவை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணை அவரது தந்தையே கொலை செய்து இருக்கிறார். இந்த சம்பவம் காரணமாக ஆதிராவின் தந்தை ராஜன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆதிராவும், அதே பகுதியை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் ஒருவரும் 2 வருடமாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் இன்று காலை திருமணம் நடக்க இருந்தது. ஆனால் நேற்று நாடு இரவில் ஆதிரா அவரது தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.