மயிலாடுதுறையில் ராமர் படத்தை இழிவுடுபடுத்தியவர்களுக்கு எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ராமர் படத்தை இழிவு படுத்தியதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதததையும் எச். ராஜா விமர்சித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் தொடங்கி தமிழகம் வழியாக மீண்டும் வடமாநிலத்தை நோக்கி ராமராஜ்ய ரதயாத்திரை நடைபெற்று வருகிறது. ராமர் கோவில் கட்ட வேண்டும், ராமர் ஆட்சியை உருவாக்க வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ரதயாத்திரை கேரளா வழியாக திருநெல்வேலி மாவட்டம் புளியரைக்குள் நுழைந்து ராமேஸ்வரம் வழியாக பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
BJP National secretary H.Raja tweeted that "The vandalism against Lord Ram at Mayiladuthurai is highly condemnable. I am surprised that DMK and others who held the assembly to ransom on Ram Rajya Rath Yatra didn't condemn this incident."