மாசுபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ வழக்கத்தை விட இன்றைக்கு மிக வேகமாக நம்முடைய சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து வருகிறது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு வருகிறோம். டஸ்ட் அலர்ஜி,ஸ்மோக் அலர்ஜி,ஸ்மெல் அலர்ஜி என்று விதவிதமான பெயர்களுடன் நோய்களும் நம்மை ஆட்கொண்டு பெரும் தொல்லையை கொடுக்கிறது, அதோடு மிகவும் சிறிய வயதிலேயே குழந்தை பருவத்திலிருந்தே மூச்சுப் பிரச்சனை சுவாசப் பிரச்சனை ஆகியவை ஏற்படுவதை நாம் பார்கிறோம். இப்போது மாசுபாடு பற்றிய ஒரு அலாரம் அடித்து நம்மை சுதாரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். சுற்றுப்புறச்சூழல் கெடுவது ஒன்றும் தனிப்பட்ட பாதிப்பு அல்ல, நம்மைச் சுற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை பரவிக் கொண்டிருக்கிறோம். சுவாசிக்கும் காற்றில், சத்தானது... இயற்கையானது என்று சொல்லும் உணவில், குடிக்கும் தண்ணீரில் என எல்லாவற்றிலுமே விஷம் பரவிக் கொண்டிருக்கிறது.
Shocking Facts About Pollution