பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ. 5, ரூ.10 தொகையை காசோலையாக வழங்குவதாக சட்டசபையில் ஆதாரத்துடன் திமுக குற்றம்சாட்டியது. பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது. இதற்காக அவர்கள் ரூ. 500 கொடுத்து வங்கிக் கணக்கு துவங்கினால் பயனாளிகளின் கணக்குகளுக்கு அந்த தொகை வந்து சேர்ந்துவிடும். திண்டுக்கல், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையாக ரூ. 3, 4, 5, 10 ஆகியன காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
DMK MLAs raised the issue in Assembly that farmers had received crop insurance cheques for as little as ₹3, ₹4, ₹5 and ₹10 in many parts of the State.