ஆர்யா கல்யாணம் கேள்விக்குறி?- வீடியோ

2018-03-22 1

37 வயதாகும் ஆர்யாவுக்கு சில ஆண்டுகளாக அவரது பெற்றோர், நண்பர்கள் திருமணத்திற்கு பெண் தேடி வந்தனர். ஆனால் எங்கும் ஆர்யாவுக்கு மணமகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் கலர்ஸ் டிவி-யில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 பேர் கலந்துகொண்டு அடுத்தடுத்த கட்டங்களில் வெற்றிபெறுபவரை ஆர்யா திருமணம் செய்துகொள்வாராம்.
இந்த நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளதால், ஆர்யா மணப்பெண்ணைத் தேர்வு செய்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சக நடிகர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்தும் இவருக்கு மட்டும் இன்னும் மணப்பெண் அமையவில்லை. பெற்றோர்கள், நண்பர்கள் மூலம் தேடியும் பொருத்தமான பெண் கிடைக்கவில்லை. இதனால் டிவி நிகழ்ச்சிக்கு வந்து பெண் தேர்வில் ஈடுபட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தன்னை மணக்க விரும்பும் பெண்கள், பெயர், குடும்ப விவரங்களை பதிவு செய்யும்படி வீடியோவில் பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். ஏராளமான இதற்கு பெண்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் இருந்து 16 பேரை தேர்வு செய்து டெலிவிஷன் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்துள்ளார்.
அவர்களிடம் பழகி தன்னை கவரும் பெண்ணை இறுதியாக மணப்பெண்ணாக தேர்வு செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். மணப்பெண் தேர்வில் கலந்து கொண்டுள்ள சில பெண்கள் தங்களை பற்றிய ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். இதனால் சிலர் இந்த நிகழ்ச்சியை கடுமையாக எதிர்க்கிறார்கள்.
ஒரு பெண் தனக்கு விவாகரத்து ஆகியிருக்கிறது. ஒரு குழந்தையும் இருக்கிறது என்று கூறினார். இன்னொரு பெண் தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இது ஆர்யா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆர்யாவின் பெண் தேடும் அணுகுமுறை கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்று பெண் அமைப்புகளும் எதிர்க்கின்றன.
இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர். இதனால் ஆர்யாவின் பெண் தேடலுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மணப்பெண்ணை ஆர்யா தேர்வு செய்வாரா என்பதில் கேள்விக்குறி உருவாகியுள்ளது.

Arya is looking for a bride in colors tv program. There is a case filed against this 'Enga veettu mappillai' show. So, Arya may not select a bride.