விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் 2010-ல் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை பிரியா மஞ்சுநாதன். இவர் சீரியலை தொடர்ந்து டான்ஸ் நிகழ்ச்சி, தொகுப்பாளர் மேக்கப் ஆர்டிஸ்ட் என வளர்ந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சின்ன தம்பி' சீரியலில் நடித்து வருகிறார் பிரியா மஞ்சுநாதன். கடந்த சில ஆண்டுகளாக இவர், காதலித்து வந்தார் என சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் காதலித்தவரையே இவர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இவருடைய திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அவரது திருமணத்தில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர்.
பல தொலைக்காட்சி பிரபலங்கள் திருமண வரவேற்பு விருந்தில் கலந்துக்கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நடிகையும், தொகுப்பாளினியுமான பிரியாவுக்கு ரசிகர்கள் திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Serial actress Priya Manjunathan is making her debut on the screen with 'Saravanan Meenakshi' serial. Priya is currently acting in 'Chinna Thambi' serial. Recently, she was married her boyfriend.