அமைச்சர்களை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி- வீடியோ

2018-03-22 13,112

சசிகலா கணவர் நடராஜன் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்கள் செல்லாதது குறித்து விமர்சிக்கப்படுகிறது. ' அமைச்சர்கள் சென்றால் அந்தக் குடும்பம் எதுபோன்ற பிரசாரத்தை மேற்கொள்ளும் என அனைவருக்கும் தெரியும் நாம் செல்ல வேண்டியதில்லை' எனப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை, சோளிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி மரணம் அடைந்தார் நடராஜன். அவரது மரணத்துக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். கணவரின் மரணத்தையொட்டி 15 நாள் பரோலில் வந்திருக்கிறார் சசிகலா.




CM Palanisamy advised ministers who were willing to participate in Natarajan's funeral, that this leads to unwanted debates so keep concentrated to strengthen your support in corresponding districts.

Videos similaires