பேரன் பிறந்தநாள்... அன்னதானத்திற்கு ரூ.25 லட்சம் கொடுத்த சந்திரபாபு நாயுடு

2018-03-22 1,670

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் பிறந்தநாளையொட்டி திருப்பதி கோயில் அன்னப்பிரசாத திட்டத்திற்கு ரூ25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செயல்படுத்தப்படும் ஸ்ரீவெங்கடஸ்வர நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், நிறுவனத்தினர் நன்கொடை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவ்னேஷின் 4வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாத திட்டத்திற்காக ரூ25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். தேவ்னேஷ் பெயரில் நேற்று பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.


Chief Minister of Andhra Pradesh Chandrababu Naidu along with his family offered prayers at the Lord Venkateswara Temple in Tirumala on Wednesday on the occasion of the fourth birthday of his grandson Devansh.

Videos similaires