தமிழகத்தில் பங்குனி வெயில் சுள்ளென்று சுடுகிறது. இன்று முதல் கோடை வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் 3 மாதங்களுக்கு நீடிக்கும் என்றும் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதமே வெயில் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் அதிகாலை நேரங்களில் பனியும், பகலில் வெயிலும் மாறி மாறி வருவதால் நோய் தாக்குதலும் ஏற்படுகிறது. இந்தியாவில் இந்த ஆண்டு கோடை வெயில் சற்று அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதுபோல கோடை காலம் ஆரம்பமே அடித்து ஆடுகிறது. பல இடங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ள நிலையில் இன்று முதல் வெப்பம் 100 டிகிரியை தொடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
The summer months from March-May will be warmer than normal and several parts of north India, at least a degree hotter than their average summer temperatures, the India Meteorological Department