அப்பல்லோவில் ஜெயலலிதாவை இவர்கள் தான் பார்த்தார்கள்- சசிகலா வாக்குமூலம்- வீடியோ

2018-03-21 9,320

ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த போது பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஓபிஎஸ், தம்பித்துரை ஆகியோர் பலமுறை பார்த்தனர் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் சசிகலா கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று மரணமடைந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த போது செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், சி ஆர் சரஸ்வதி ஆகியோர், ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் இட்லி சாப்பிட்டார் என்று கூறினார். பின்னர் அதெல்லாம் பொய் என்று தகவல் வெளியானது.

O Paneerselvam and Thambi Durai had met Jayalalithaa in hospital in September and October. Jayalalithaa had also met Veeraperumal and Perumalswamy her personal security officers she had also told them according to the affidavit.

Videos similaires