கத்ரீனாவின் அம்மா தமிழகத்தில் என்ன செய்கிறார்?

2018-03-20 1,927

நடிகை கத்ரீனா கைஃப் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிக்கும் சினிமா பற்றிய செய்திகளை விட காதல் கிசுகிசுக்கள்தான் அதிகமாக வந்திருக்கிறது. சமீபத்தில்கூட ரன்பீர் கபூரை விட்டுவிட்டு மீண்டும் சல்மான் கானை அவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை கத்ரீனா கைஃப் சினிமாவுக்கு சிறிய பிரேக் விட்டுவிட்டு தமிழகம் வருகிறார். தமிழகம் வருவது சினிமா படப்பிடிப்புக்காக அல்ல. கத்ரீனா கைஃப்பின் அம்மா திண்டுக்கலில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாராம். தனது அம்மாவைப் பார்ப்பதற்காக வரும் கத்ரீனா கைஃப், அந்தப் பள்ளிக் குழந்தைகளுடன் தனது நேரத்தை செலவழிக்க இருக்கிறாராம். அதற்காக, விரைவில் வர இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நடிகை கத்ரீனா கைஃப்பின் அம்மா சுசாணே திண்டுக்கல் அருகே உள்ள மவுன்டெய்ன் வியூ பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அறக்கட்டளை சார்பாக, ஏழைக் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கும் தனது அம்மாவை பார்க்கத்தான் வரவிருக்கிறார் கத்ரீனா.


Katrina kaif takes small break for cinema and comes to Tamil Nadu. Katrina's mother Suzanne is working as a teacher at Mountain View School near Dindigul. Katrina comes to see her mother.