செங்கோட்டையில் போலீசார் கண்ணில் மண்ணை தூவி 144 தடையை மீறி நுழைந்த சீமான் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தீந்தமிழ்நாட்டில் தீய சக்திகளுக்கு என்ன வேலை என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் போராட்டம் நடத்தின. இதையடுத்து செங்கோட்டையில் ராமராஜ்ய ரத யாத்திரை தடுப்பு மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
Naam Tamiler party chief co ordinator Seeman protest against Ratha yathra in Nellai Sengottai. Seeman have been arrested in Nellai. He also asked What was the work of the evil forces in Tamil Nadu? He also accused the BJP of planning a riot in Tamil Nadu.