விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். வி.எச்.பியின் ரத யாத்திரையை தமிழகத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் இந்த யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் எனவும் அந்த தலைவர்கள் அறிவித்தனர்.
Tamilnadu Police preventive arrested the political leaders who were opposing to the VHP Yatra.