மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 29 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம் என பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அன்று மாலையே சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது.
Deputy Cheif minister O Paneerselvam has said that lets wait till 29th of March on Cauvery issue. Stalin urged Tamilnadu govt to support no confidence motion against Central govt.