பெரிய மீசையுடன் கமல் புது லுக்- வீடியோ

2018-03-19 1

கமல் ஹாஸனின் புதிய கெட்டப் பற்றி தான் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் காலத்தில் இருந்து கிளீன் ஷேவ் பண்ணி வந்த உலக நாயகன் கமல் ஹாஸன் கடந்த சில நாட்களாக ஷேவ் பண்ணாமல் இருந்தார். அவரை பார்த்த ரசிகர்களோ ஆண்டவருக்கு உடம்புக்கு சரியில்லையோ என்று கேட்டனர். லேசான தாடி, மீசையுடன் பார்க்க உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போன்று இருந்தார் கமல். இந்நிலையில் அவர் பெரிய மீசை வளர்த்து மீசைய முறுக்கு என்பது போன்று புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார். கமலின் புதிய கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். வெற்றியோ தோல்வியோ மீசைய முறுக்கிட்டார் ஆண்டவர் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். ஒரு மீசை வளர்த்ததற்காக கூட செய்தியில் வரும் அரசியல்வாதி என்றால் அது எங்கள் உலக நாயகனே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Kamal Haasan has changed his get-up and looks like the man seen in Devar Magan movie. Fans are happy to see him in this new avatar.