பார்ட்டிக்கு போக வேண்டாம் என்று, தாய் தடுத்ததால், பிளஸ் டூ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் கெம்பேகவுடா நகர் நஞ்சப்பா லேஅவுட்டை சேர்ந்தவர், சந்திரசேகர், டிரைவர். இவர் மனைவி பெயர் சந்திரிகா. பள்ளி குழந்தைகளுக்கு டியூசன் டீச்சராக வேலை பார்க்கிறார். இத்தம்பதிகள் மகள் அர்ப்பிதா (17). பியூசி 2வது ஆண்டு (பிளஸ் டூ), படித்து வந்தார் அர்ப்பிதா. இப்போது அவருக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வந்தது.