தமிழக சட்டசபை 3 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடுகிறது. காவிரி பிரச்னை, குரங்கணி தீ விபத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 15ம் தேதி கூடியது. அப்போது, தமிழக அரசு 2018-2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையை எதிர்க்கட்சிகள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தன. பட்ஜெட் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
TamilNadu assembly to resume today after 3 holidays. Opposition parties plan to question the various issues including the Cauvery problem, the coconut fire accident and the law and order problem.