பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றை பிடித்து பத்திரமாக வனத்தில் விடும் தீயணைப்புத்துறை வீரர் அபு விஷமுள்ள ராஜ நாகம் கடித்து மரணமடைந்துள்ளார். பாம்புகளின் காதலன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். 33 வயதான அபு ஜாரின் ஹூசைனுக்கு பாம்புகள் என்றாலே கொள்ளை பிரியம். அள்ளி அணைத்துக்கொள்வார், முத்தமிட்டு கொஞ்சி மகிழ்வார். கோலாலம்பூர் தீயணைப்பு துறையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். தீயணைப்பு துறையில் மீட்புப்பணியோடு மட்டுமல்லாமல், பாம்புகள் பிடிப்பதிலும் வல்லவர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாம்புகளை கொல்லாமல், அதை பாதுகாப்பாக பிடித்து வந்து உயிரியல்பூங்காவில் விடும் பணியையும் செய்து வந்தார்
Hussin headed the King Cobra Squad of his local fire department, teaching his colleagues how to capture the reptiles without harming them. His luck finally ran out when he was called out to a snake catching operation in Bentong, where he was fatally biten.