முத்தரப்பு தொடரின் இறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர் கொள்கிறது இந்தியா

2018-03-18 455

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரின் இந்தியா, வங்கதேசம் மோதும் இறுதி டி-20 போட்டி இன்று நடக்கிறது. இலங்கையில் இந்தியா, வங்கதேசம், இலங்கை மோதும் முத்தரப்பு டி-20 போட்டி நடந்து வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 7 போட்டிகள் நடக்கிறது. இந்த 7 போட்டிகளும் கொழும்புவில் இருக்கும் பிரேமதாச மைதானத்தில்தான் நடக்கும். இந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடக்க உள்ளது.

இலங்கையின் 70வது சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.இதற்கு நிதாஸ் கோப்பை போட்டி என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொடருக்காக இலங்கை அணி கடந்த ஒரு மாதமாக பயிற்சி எடுத்தது.

india vs bangladesh t20 held on today

Videos similaires